×

சென்னை எண்ணூரில் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு..!!

சென்னை: சென்னை எண்ணூரில் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் தனியார் உரத் தொழிற்சாலை அமைந்துள்ளது. கடந்த டிசம்பர் 26ம் தேதி இந்த தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, எண்ணூரில் உள்ள உர ஆலை செயல்பாடு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து 7 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து விசாரிக்க அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, அமோனியா கசிவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் சுற்றுச்சுழல் துறை கூடுதல் தலைமை செயலாளர், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இழப்பீடு தொகை தொடர்பாக ஒரு சில நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என சுற்றுச்சூழல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அம்மோனியா கசிவு தொடர்பாக ஆய்வு செய்த தொழில்நுட்ப குழு, ஒரு சில நாட்களில் அரசிடம் அறிக்கையை சமர்பிக்கிறது. அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. மேலும் இழப்பீடு தொகை தொடர்பாக ஒருசில நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை எண்ணூரில் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU GOVERNMENT ,CHENNAI ,Chennai Oil ,Tulur Periyakupam ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்